சனி பெயர்ச்சி 2025 ராசி பலன்கள் | Sani Peyarchi Palangal 2025

சனி பகவான் இன்று (29.3.2025) இரவு 9.44 மணிக்கு தனது சொந்த வீடான கும்ப ராசியில் உள்ள பூரட்டாதி நட்சத்திரம் 3ஆம் பாதத்தில் இருந்து, மீனத்தில் உள்ள பூரட்டாதி 4ஆம் பாதத்திற்கு பெயர்ச்சியாகிறார். 

திருக்கணிதப் பஞ்சாங்கப்படி இந்த கிரகப்பெயர்ச்சி கணிக்கப்பட்டுள்ளது. சனி பகவான் தனது 3ஆம் பார்வையால் கால புருஷ 2ஆம் இடமான ரிஷப ராசியையும், 7ஆம் பார்வையால் கால புருஷ 6ஆம் இடமான கன்னி ராசியையும், 10ஆம் பார்வையால் கால புருஷ 9ஆம் இடமான தனுசு ராசியையும் பார்க்கிறார்.

ரிஷபம் ராசி 2025


ரிஷப ராசிக்கு 11ம் வீடான லாப ஸ்தானத்திற்கு சனி பகவான் பெயர்ச்சியாக உள்ளார்.
சனி தேவரின் நாமம் : லாப சனி
சனி பகவான் தரக்கூடிய தாக்கம் : பலவிதத்தில் நன்மைகள் நடக்கும். மிகவும் சிறப்பான காலமாக இருப்பதால், விவேகத்துடன் செயல்பட்டால் எதிலும் வெற்றி கிட்டும்.
பலன் சதவிகிதம் :
நன்மை : 90%
தீமை : 10%

மிதுனம் ராசி 2025


மிதுன ராசிக்கு 10ம் வீடான தொழில், உத்தியோகம், ஜீவன ஸ்தானத்தில் சனி பகவான் சஞ்சரிக்க உள்ளார்.
சனி தேவரின் நாமம் : கர்ம சனி
சனி பகவான் தரக்கூடிய தாக்கம் : சனியின் பாதிப்பு குறைவாக இருக்கும். இந்த காலத்தில் நீங்கள் செய்யக்கூடிய வேலை, தொழிலில் வளர்ச்சியும், உத்தியோக பதவி உயர்வு உண்டாகும்.
பலன் சதவிகிதம் :
நன்மை : 90%
தீமை : 10%

கடகம் ராசி 2025


கடக ராசிக்கு 9ம் வீடான பாக்கிய, தந்தை ஸ்தானத்தில் சனி பகவான் பெயர்ச்சியாக உள்ளார்.
சனி தேவரின் நாமம் : பாக்கிய சனி
சனி பகவான் தரக்கூடிய தாக்கம் : இதுவரை தொல்லை தந்த அஷ்டம சனி முடிவடைகிறது. இனி. எதிலும் மேன்மை உண்டாகும். தெய்வ வழிபாடு அவசியம்.
பலன் சதவிகிதம் :
நன்மை : 75%
தீமை : 25%

துலாம் ராசி 2025


துலாம் ராசிக்கு 6ம் வீடான நோய், எதிரி ஸ்தானத்தில் சனி பகவான் சஞ்சரிக்க உள்ளார்.
சனி தேவரின் நாமம் : ரோக சனி
சனி பகவான் தரக்கூடிய தாக்கம் : பாதிப்பு குறைவு. சனி 6ல் அமர்வது நன்மை தரும்.பல வகையில் துலாம் ராசிக்கு யோகமான பலன்கள் கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும்.
பலன் சதவிகிதம் :
நன்மை : 80%
தீமை : 15%

விருச்சிகம் ராசி 2025


விருச்சிக ராசிக்கு 5ம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சனி பகவான் பெயர்ச்சியாக உள்ளார்.
சனி தேவரின் நாமம் : பஞ்சம சனி
சனி பகவான் தரக்கூடிய தாக்கம் : தொல்லை தந்து வந்த அர்த்தாஷ்டமச் சனி முடிவடைகிறது. எதிலும் தடை நீங்கி, உங்கள் செயல்களில் மேன்மையும், நற்ப்யெரும் உண்டாகும்.
பலன் சதவிகிதம் :
நன்மை : 75%
தீமை : 25%

மகரம் ராசி 2025


மகர ராசிக்கு 3ம் வீடான தைரிய, வீரிய ஸ்தானத்தில் சனீஸ்வரன் சஞ்சரிக்க உள்ளார்.
சனி தேவரின் நாமம் : சகாய சனி
சனி பகவான் தரக்கூடிய தாக்கம் : ஆட்டம் வேண்டாம். ஏழரை சனி முடிவதால் நல்ல காலம் ஆரம்பம். மனக்குழப்பம் நீங்கி தெளிவு கிடைக்கும். சிறப்பாக முடிவுகளை எடுத்து செயல்படுவீர்கள்.
பலன் சதவிகிதம் :
நன்மை : 90%
தீமை : 10%

கும்பம் ராசி 2025


கும்ப ராசிக்கு 2ம் வீடான தன, வாக்கு ஸ்தானத்தில் சனி பகவான் சஞ்சரிக்க உள்ளார். ஜென்ம சனி விலகுகிறது
சனி தேவரின் நாமம் : பாத சனி
சனி பகவான் தரக்கூடிய தாக்கம் : ஏழரை சனியின் கடைசி பகுதி என்பதால் கவனமாக, நிதானத்துடன் செயல்பட்டால் உங்களில் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அன்றைய வேலைகளை அன்றே முடிக்க பாருங்கள்.
பலன் சதவிகிதம் :
நன்மை : 30%
தீமை : 70%