அவுஸ்ரேலியா அணியை 22 வருடங்களின் பின் அவர்களது சொந்த மண்ணில் வீழ்த்தி தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான்
அவுஸ்ரேலியா அணிக்கும் பாகிஸ்தான் அணிக்கும் இடையே அவுஸ்ரேலியாவின் பேத் மைதானத்தில் இன்றைய தினம் நடைபெற்ற மூன்றாவது ஒரு நாள் சர்வதேச கிறிக்கெட் சுற்றுப்போட்டியில் பாகிஸ்தான் அணியினரின் பந்துவீச்சுக்களை எதிர்கொள்ளமுடியாத அவுஸ்ரேலியா அணியினர் 31.5 ஓவர்களில் 140 ஓட்டங்களை மட்டும் பெற்று அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தனர்.
141 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பாடிய பாகிஸ்தான் அணியினர் 26.5 ஓவர்களில் இரண்டு இலக்குகளை மட்டும் இழந்து வெற்றிபெற்றனர். இதன் மூலம் பாகிஸ்தான் அணி 22 வருடங்களின் பின் அவுஸ்ரேலியா அணியை அவர்களது சொந்த மண்ணில் வீழ்த்தி தொடரை கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.