Header Ads Widget

உயர் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்த பெற்றோர்!

 2024 தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள்களின் மதிப்பீட்டு பணியை ஆரம்பிக்கவிடாமல் அடம்பிடிக்கும் ஒரு சில பெற்றோர்.

2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பதினைந்தாம் திகதி நாடளாவியரீதியில் நடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் வினாத்தாள்கள்  தொடர்பில் பிரச்சினை ஏற்பட்டிருந்த நிலையில், அது தொடர்பில் பரீட்சை திணைக்களம் நேற்றைய தினம் இறுதி தீர்மானத்தினை மேற்கொண்டுள்ளது.

பரீட்சை திணைக்களம் மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தனித்தனியாக மேற்கொண்ட விசாரணைகளின் மூலம் மூன்று கேள்விகள் மாத்திரமே வெளியாகியிருந்ததை உறுதிப்படுத்தி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் போது முன்கூட்டியே பகிரப்பட்டதாகக் கூறப்படும் வினாத்தாளில், சம்பந்தப்பட்ட மூன்று கேள்விகளுக்கு மாத்திரம் , அனைத்து மாணவர்களுக்கும் முழு மதிப்பெண் வழங்க நிபுணர் குழுவின் பரிந்துரையின்படி, முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சர்ச்சைக்குள்ளாகியுள்ள  2024 ஆம் ஆண்டு  தரம் 5  புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்தப்போவதில்லை என பரீட்சை திணைக்களம் இறுதி தீர்மானம் எடுத்துள்ளது.

இந்த நிலையில்  2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் மற்றும் வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்படுவதைத் தடுக்கும் உத்தரவை வழங்கக் கோரி, பரீட்சை எழுதிய மாணவர்களின் பெற்றோர் ஒரு சிலரால் இன்று இலங்கையின் உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமைகள் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டு செப்டெம்பர் 15 ஆம் திகதி நடைபெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய ஒரு சில மாணவர்களின் பெற்றோரால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.




Post a Comment

0 Comments