Header Ads Widget

தரம் 5 புலமை பரிசில் பரீட்சையினை மீண்டும் நடத்துவதா? இல்லையா?


தரம் 5 புலமை பரிசில் பரீட்சையினை மீண்டும் நடத்துவதா இல்லையா என்று மிக விரைவில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

மீண்டும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நடத்துவதா, இல்லையா என்பது தொடர்பில் விரைவில் இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் ஊடாக மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றது இதன் முதல் கட்டமாக மகரகமவில் உள்ள தேசிய கல்வி நிறுவகத்தின் திட்டமிடல் பணிப்பாளர் கைது செய்யப்பட்டு அடுத்தமாதம் ஏழாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவரிடம் மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரனைகளின் அடிப்படையில் வினாத்தாள் கசிந்தமை தொடர்பான சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் சில சந்தேகநபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவ ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

குறித்த விசாரணைகளின் உண்மைகளை கருத்திற்கொண்டு மீண்டும் புலமைப்பரிசில் பரீட்சை நடத்துவதா இல்லையா என்பது தொடர்பில் விரைவில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

 

Post a Comment

0 Comments