Header Ads Widget

அனைவருக்கும் புள்ளிகள் வழங்கப்படும் பரீட்சை திணைக்களம்

 வினாத்தாள் கசிந்த விடயத்தில் கல்வி அமைச்சு முக்கிய தீர்மானம்

செப்டம்பர் மாதம் பதினைந்தாம் திகதி நாடளாவியரீதியில் நடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் வினாத்தாள்கள்  தொடர்பில் பிரச்சினை ஏற்பட்டிருந்த நிலையில், அது தொடர்பில் கல்வி, விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சு இன்று இறுதி தீர்மானத்தினை மேற்கொண்டுள்ளது.

இதன்படி, தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் போது முன்கூட்டியே பகிரப்பட்டதாகக் கூறப்படும் வினாத்தாளில், சம்பந்தப்பட்ட மூன்று கேள்விகளுக்கு மாத்திரம் , அனைத்து மாணவர்களுக்கும் முழு மதிப்பெண் வழங்க நிபுணர் குழுவின் பரிந்துரையின்படி, முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்துவது சிறுவர்களாகிய பத்து வயதேயான பிள்ளைகளின் மன நிலையில் பாரிய பாதிப்பையும், நெருக்கடியையும் ஏற்படுத்தும் என்பதால் அனைத்துப் பிள்ளைகளுக்கும் நியாயமான தீர்வு வழங்கப்பட வேண்டியது அவசியம் எனவும் கல்வி அமைச்சு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 Final Decision Regarding Grade 5 Scholarship Exam Paper Leaked 



Post a Comment

0 Comments