Header Ads Widget

இமய மலையில் 100 வருடங்கள் பழமையான மனித எச்சங்கள் மீட்பு!

எவரெஸ்ட் சிகரத்தில் 100 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 1924 ஆம் ஆண்டு மலையேறி எவரெஸ்ட் சிகரத்தை அடைய முயன்றபோது காணாமல் போன ஒருவரின் மனித எச்சங்களை மலையேறி ஆய்வுகளை மேற்கொள்ளும் விஞ்ஞானிகளின் குழு ஒன்று நேற்றைய தினம் கண்டுபிடித்துள்ளது. 

காலநிலை மாற்றம் காரணமாக இமயமலையைச் சுற்றியுள்ள பனி உருகிவருவதாகவும் இதனால் முன்னதாக எவரெஸ்ட் மலை ஏறும் முயற்சியில் உயிரிழந்தவர்களின் எச்சங்களை அடையாளம் காண முடிவதாகவும் ஆய்வுகளை மேற்கொள்ளும் விஞ்ஞானிகளின் குழு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, சின் மற்றும் அவரது குழுவினர், ஒரு நேஷனல் ஜியோகிராஃபிக் ஆவணப்படத்திற்காக படமெடுக்கும் போது, ​​எவரெஸ்ட் சிகரத்தில் 100 ஆண்டுகளுக்கு முன்பு 1924 ஆம் ஆண்டு சக ஏறுபவர் ஜார்ஜ் மல்லோரியுடன் காணாமல் போன சாண்டி என்று அழைக்கப்படும் ஆண்ட்ரூ காமின் இர்வினின் எச்சங்கள் என்று அவர்கள் நம்பும் ஒரு பூட்ஸைக் கண்டுபிடித்துள்ளனர். 

அதனை தொடர்ந்து ஆய்வு செய்தபோது, ​அந்த காலனியின் உள்ளிருந்த காலுறையில் "ஏ.சி.இர்வின்" என்ற சிவப்பு லேபிள் இருந்துள்ளதாகவும், இது இந்த எச்சங்கள் இர்வினுடையது என்பதை வலுவாக குறிப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.  

ஜூன் 8, 1924  ஆம் ஆண்டு எவரெஸ்ட் சிகரத்தை அடையும் முயற்சியின் போது காணாமல் போன இர்வின் மற்றும் மல்லோரியின் நிலை பற்றிய புதிய நுண்ணறிவுகளை இந்த கண்டுபிடிப்பு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1999  ஆம் ஆண்டு  ஜார்ஜ் மல்லோரியின் உடல் எவரெஸ்ட் மலைப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டாலும், அவருடன் கூடவே சென்ற மற்றைய மலையேறும் வீரரான  இர்வினின் எச்சங்கள் இருந்த இடம் இதுவரை அறியப்படாமல் இருந்த நிலையில் 100 வருடங்களின் பின்னர் நேற்று  அவர் அணிந்து சென்ற பூட்ஸ் மற்றும் அவருடைய மனித எச்சங்கள் என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடித்தக்கது.

இர்வினின் குடும்ப உறுப்பினர்கள் கண்டுபிடிக்கப்பட்டள்ள அந்த எச்சங்களின் அடையாளத்தை உறுதிப்படுத்த டி.என்.ஏ மாதிரிகளை வழங்கியுள்ளனர்.

1924  ஆம் ஆண்டு இர்வின் மற்றும் மல்லோரி எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்திருந்தால், 1953 ஆம் ஆண்டு எட்மண்ட் ஹிலாரி மற்றும் டென்சிங் நோர்கே ஆகியோரின் முதன்முதலில் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்தவர்கள் என்ற சாதனையை படைப்பதற்கு முன்னரே இர்வின் அந்த சாதனையை படைத்து உயிரிழந்துள்ளார் என்று பதிவுசெய்யவேண்டிய ஒரு சூழ்நிலை உருவாகியுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள். 

இருந்தாலும் 1924 ஆம் ஆண்டு கானாமல் போன இர்வினுடைய பூட்ஸ் எந்த உயரத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பான விரிவான தகவல்களை இன்னும் வெளிவரவில்லை.

தற்போது கிடைத்துள்ள மனித எச்சத்தை ஆராய்ச்சி செய்வதன் மூலம் இர்வின் 1924 ஆம் ஆண்டு எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்தாரா என்ற மர்மத்தை இறுதியாக தீர்க்க முடியும் என நம்பப்படுகின்றது. 



Post a Comment

0 Comments